கோவிலில் கொடூரம்.. திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவியவர், திமுக பிரமுகரால் கல்லால் அடித்தே கொலை?..!

கோவிலில் கொடூரம்.. திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவியவர், திமுக பிரமுகரால் கல்லால் அடித்தே கொலை?..!


Erode Arachalur BJP Worker Murder by DMK Supporter

பாஜகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர், மற்றொரு திமுக பிரமுகரால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. ஒரே கட்சியில் இருக்கையில் ஏற்பட்ட முன்விரோத பிரச்சனை, கட்சி காவலுக்கு பின்னர் பழிதீர்க்கப்ட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சநல்லூர், நாகராஜபுரம் பகுதியை சார்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர் டெய்லராக இருந்து வருகிறார். இவரின் மனைவி சுந்தரி. இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். வடிவேல் திமுக வார்டு செயலாளராக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். 

வடிவேலிற்கும் - அப்பகுதியை சார்ந்த திமுக முன்னாள் கவுன்சிலரின் தம்பியான ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. வடிவேல் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததும் தகராறை முடித்துக்கொள்ள எதிர்தரப்பு திட்டமிட்டுள்ளது. நேற்று நாகராஜபுரம் தளவுமலை விநாயகர் கோவிலில் வடிவேல் மற்றும் சிலர் இருந்துள்ளனர்.

erode

அப்போது, அங்கு வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் - வடிவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில், ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே இருந்த கல்லை எடுத்து வடிவேலை சரமாரியாக தாக்கி இருக்கிறார். படுகாயமடைந்த வடிவேல் மயங்கிய நிலையில், அவருக்கு அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கொடுத்து தெள்ளியவைத்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

வீட்டிற்கு சென்ற வடிவேல் இரவு படுத்து உறங்கிய நிலையில், காலையில் எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் வடிவேலின் அருகே சென்று பார்க்கையில் அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக அறச்சநல்லூர் காவல் துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அறச்சநல்லூர் காவல் துறையினர், திமுக முன்னாள் கவுன்சிலரின் தம்பியான ஈஸ்வரமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.