மின் கட்டண உயர்வு விவகாரம்: மீண்டும் கோர்ட் படியேறிய தமிழக அரசு..!

மின் கட்டண உயர்வு விவகாரம்: மீண்டும் கோர்ட் படியேறிய தமிழக அரசு..!



Electricity tariff hike issue: Tamil Nadu government again moved to court

தமிழகத்தில் மின்கட்டணம் உயரும் எனகடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கும், கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிவிசாரணையின் முடிவில், தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மின் கட்டண உயர்வுக்கான தடை நீங்கியது.

இதற்கிடையே, நூற்பாலைகள் சங்கம் சார்பில் 2 நீதிபதிகள் அடங்கிய அம்ர்வு அளித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.