அரசியல் தமிழகம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துரைமுருகன்! தொண்டர்கள் பெருமூச்சு

Summary:

Duraimurugan discharged from hospital

தீடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார். 

தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரை முருகன், தன்னை கருணாநிதி தனது சொந்த பிள்ளைபோல வளர்த்தார் என்றும், ஸ்டாலினுக்கு கொடுக்கத உரிமைகளை தனக்கு கொடுத்தார் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்ணீர் வடித்தார்.

இந்நிலையில் இன்று காலை துரை முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனில் பதற்றத்தில் இருந்த தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Advertisement