பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு... உறவினர் வெட்டிக் கொலை.!! ஜேசிபி ஆபரேட்டர் கைது.!!



driver-arrested-for-murdering-relative-over-financial-d

திண்டுக்கல்லில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக இளைஞரை கொலை செய்த வாகன ஓட்டுனரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்தனர். 

திண்டுக்கல் திருமலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி, இவரது மகன் கார்த்திக்(27) பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். ஏரியோடு பகுதியை சேர்ந்த கலைவேந்தன் மகன் ஜெயபாண்டி(32). பொக்லைன் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி செல்வராணியுடன் (27) திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

tamilnadu

இதனிடையே ஜெயபாண்டி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற கார்த்திக்கை,இரும்பு கம்பியால் ஜெயபாண்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: "அவ பிணம் வாசல்ல கிடக்கு எடுத்துக்கோங்க..." மருமகளை குத்திக் கொன்ற மாமனார்.!! வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்.!!

இதற்கடுத்து விசாரணையை தீவிரமாக்கிய போலீசார், இதில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே கொலை  ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் விசாரணைக்காக போலீசார் ஜெய பாண்டியை கைது செய்தனர். அதிகாரப்பூர்வமான காரணம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வரும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு.!! அண்ணனை அடித்து கொன்ற தம்பி.!!