நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
"வாழ்க்கையை என்ஜாய் பண்ணுடா" காதலனுக்கு அட்வைஸ்.. ஆண் நண்பர்களுடன் மது உல்லாசம்.. மண்டையை உடைத்த காதலன்..!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் வசித்து வரும் 20 வயதான ‘கிப்டி’ என்ற ஜாபியா ஜாஸ்மின் கருங்கல் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இவர் தனது பள்ளி தோழனான அஜினை கடந்த 6-வருடங்களாக காதலித்து வருகிறார்.
பைக் பிரியரான இவர் காதலனுடன் பைக்கில் பல இடங்களில் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரங்களில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும், தோழிகளையும் அழைத்து மது மற்றும் ஆண் நண்பர்களுடன் கொண்டாட்டம், என ஜாலியாக இருந்துள்ளனர்.
இதை அறிந்த காதலன் அஜின் கிப்டியை கண்டித்துள்ளார். அதற்கு, வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா, என்னை நம்பாதே, என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு என அட்வைஸ் செய்தது மட்டுமல்லாமல், இஷ்டம் இருந்தால் இரு இல்லனா போயிட்டே இரு என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கிப்டி அவரது பெரியப்பாவின் பங்களா வீட்டில், ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன், மது விருந்துடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த அஜின் அந்த வீட்டிற்கு சென்று, வீட்டின் அருகே இருக்கும் மரத்தின் மீது ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அஜின் அங்கே கிடந்த மரக்கட்டையை எடுத்து அறைக்குள் சென்று அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை விரட்டியடித்துள்ளார். மேலும் கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையில் அடித்தார். கிப்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின், அங்கிருந்து தப்பியோடினார்.
இதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிப்டி, இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகார் அளித்ததை அடுத்து அஜினை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டை காவல்துறையினர் சோதனை செய்த போது அந்த வீட்டில், புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், மேலும் ஆணுறைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, கிப்டியின் ஆண் நண்பர்கள் பற்றியும் கிப்டியால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அஜின் தாயார் கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது எனவும் தனது மகன் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.