தமிழகம்

டிக் டாக் டப்மாஷ். அனைத்தும் பொய்! இதோ ஆதாரம்!

Summary:

Does men really cut his throat in tik tok

இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மீதான மோகம் மிகவும் அதிகரித்துள்ளது. சாதாரண லைக்கிற்காக தங்களது உயிரையும் பணயம் வைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். டிக் டாக், மியூசிக்கலி, டப்மாஷ் போன்ற செயலிகள் இன்றைய இளைய சமூதாயத்தை அதன்பக்கம் இழுத்து வைத்துள்ளது. 

பொழுது போக்கு என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதும், ஆபாசமாக பேசுவதும் இந்த செயலிகளில் சாதாரணமாகிவிட்டது. மேலும் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் ஆண்கள் பல கடினமான செயல்களை செய்துவதும் இதில் வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு ஆண், டப்மாஷ் செய்யும்போது கழுத்தை அறுத்துக்கொண்டதுபோல அதில் இடம்பெற்றிருக்கும். இந்த விடியோதான் இன்னைக்கு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஆனால், அந்த வீடியோவில் ரத்தம் வடிவது உண்மை இல்லை காரணம், அந்த விடியோவை நீங்கள் நன்றாக உத்துப்பார்த்தால் ரத்தம் வருவதற்கு முன்பாக அந்த வீடியோ ஒரு முறை கட் ஆகி ஒளிபரப்பாகும். அதாவது இரண்டு வீடியோவாக எடுத்து அதனை ஒட்டியுள்ளனர். மேலும் அந்த கத்தியில் இருப்பது உண்மையான ரத்தம் அல்ல. 


Advertisement