முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!


doctorate award for tamilnadu CM

தமிழக 'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. 

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது பல்கலைக்கழகம் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

edapadi palanichami

இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம்  வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.சி.சண்முகம் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.