திமுக இளைஞரணி மாநாடு; நேரில் பர்வையிட்ட இன்பநிதி.!



DMK Youth Wing Meeting in Salem 21 Jan 2024 


சேலம் மாவட்ட திமுக சார்பில், திமுக இளைஞரணி மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மாண்டமாக 5 இலட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில் திமுக மாநாடு நடைபெறுகிறது. 

மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு அசைவ விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, கே.என் நேரு, சேகர் பாபு உட்பட பலரும் சேலம் சென்றுள்ளனர். 

நாளை மாநாடு நடைபெறும் பணிக்காக 10 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சேலத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சேலத்தில் மாநாடு நடைபெறவுள்ள இடத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் இன்பநிதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.