அரசியல் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? அல்லது தள்ளிப்போகுமா? உச்சநீதிமன்றம்!

Summary:

DMK File Pettion

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு ஆகியவைகளை பின்பற்றாமல் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளதாக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் திமுக  மனு தாக்கல் செய்துள்ளது.  வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை எனவும்  1991-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா அல்லது மீண்டும் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


Advertisement