அரசியல் தமிழகம்

பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த தி.மு.க கவுன்சிலர் மறுபடியும் கட்சியில் சேர்க்கப்பட்டார்!

Summary:

Dmk Controversy counselor again joined party


பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாக பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில் நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் அங்கிருந்த சத்யா என்ற பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. 

இது தொடர்பாக செல்வகுமார் மீது அந்த பெண் போலீஸில் புகார் கொடுத்து 4 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த வீடியோவை சத்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. 

அவரை திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழன் அறிவித்தார். 

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 3 மாதத்திற்குள், மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்படுவதாக தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “செல்வகுமார், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழகப்பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு, கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் ”என்று தி.மு.க பொதுச் செயலாளர் க. அன்பழகன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 


Advertisement