
Districtwise corono affect list in tamilnadu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்குநாள் அதிகமாகி அசுரதாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 லிருந்து 13,191 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனோவால் மேலும் 3 பேர் பலியான நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, சென்னையில் 8,228 பேர், சென்னையை தவிர்த்து செங்கல்பட்டில் 621 பேர், திருவள்ளூரில் 594 பேர், கடலூரில் 420 பேர், அரியலூரில் 355 பேர், கோவையில் 146 பேர், மதுரையில் 172 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாகையில் 51, நாமக்கலில் 77, நீலகிரியில் 14, பெரம்பலூரில் 139, கரூரில் 79, புதுக்கோட்டையில் 13, ராமநாதபுரம் 39, ராணிப்பேட்டையில் 84 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சேலத்தில் 49 பேர், சிவகங்கையில் 26பேர், தென்காசியில் 75 பேர், தஞ்சையில் 76 பேர், தேனியில் 92 பேர், காஞ்சிபுரத்தில் 223 பேர், கன்னியாகுமரியில் 49 பேர், கிருஷ்ணகிரியில் 21 பேர், திருப்பத்தூரில் 29 பேர், திருவண்ணாமலையில் 166, திருவாரூரில் 32, தூத்துக்குடியில் 113, நெல்லையில் 242, திருப்பூரில் 114, திருச்சியில் 68, திண்டுக்கலில் 127, ஈரோட்டில் 70, கள்ளக்குறிச்சியில் 112, தர்மபுரியில் 5, வேலூரில் 34, விழுப்புரத்தில் 318, விருதுநகரில் 61 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement