புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"காதல், உல்லாசத்திற்கு ஜாதி தடையில்லை.. திருமணத்திற்கு முக்கியம்".. கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, சிசு ஆணவக்கொலை..! காதலன் அதிர்ச்சி செயல்..!
காதலிக்கும்போதும், காதலியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி ஆசை வார்த்தை கூறி அனுமதியோடு அத்துமீறும்போதும் இடைவராத ஜாதி, குடும்பத்தை சந்தித்து திருமண பேச்சு எடுக்கும்போது முளைத்து, குடும்பத்தின் பேச்சை கேட்டு காதலிக்கு மிகப்பெரிய செய்ய துணிகிறது எனில் அங்கு காதல் இல்லை. கேள்விக்குறியானது தனது வீட்டை விட்டு காதலன் தன்னை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை தான்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், கோவைக்கப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார் (வயது 22). நாகையக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தபோது, தன்னுடன் படித்து வந்த 19 வயது மாணவியுடன் பழகி இருக்கிறார்.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதனிடையே, காதல் ஆசை காண்பித்த அஜித் குமார், காதலியை பாலியல் ரீதியாக வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில், காதல் விவகாரம் அஜித்குமாரின் பெற்றோருக்கு தெரியவரவே, அவரின் பெற்றோர் மகனை கண்டித்துள்ளனர். மேலும், வேறு ஜாதி பெண்ணுடன் கொண்ட காதலுக்கு சம்மதம் தர இயலாது என திருமணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை உணர்ந்த காதல் ஜோடி கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டது. கருவுற்று இருந்த மனைவிக்கு, சத்துமாத்திரை என கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார்.
இதனால் பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே, அஜித் குமாரிடம் கேட்டபோது விபரம் தெரியவந்துள்ளது. காதல் மனைவி தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் நியாயம் கேட்கையில், பெண்ணின் ஜாதியை திட்டி, அவர் அணிந்திருந்த நகையை வாங்கிவிட்டு விரட்டியடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்மணி வேடசந்தூர் காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவியிடம் புகார் அளிக்கவே, வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அஜித் குமார், அவனின் தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.