அதிமுக கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி.!



Dindigul Srinivasan on AIADMK Alliance 

 

சென்னையில் உள்ள இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். 

விரைவில் கூட்டணி

அதனைத்தொடர்ந்து, கூட்டத்தினரிடம் உரையாற்றிய முன்னாள் அமைச்சர், "அதிமுக கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் மற்றும் கூட்டணி விரைவில் அமைகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் தலைமை சார்பில் அறிவிக்கப்படும். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை காவலாளி Vs நோயாளியின் உறவினர்.. நாக்கூசும் வார்த்தையால் நடந்த வாதம்.!

AIADMK

ரகசிய பேச்சுவார்த்தை

நமது கூட்டணி அறிவிப்பு வெளியானதும், மக்கள் அதனை தீபாவளி போல கொண்டாடுவார்கள். அதிமுக தலைமையிலான ஆட்சியே 2026 ல் அமையும். கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது" என பேசினார்.

 

இதையும் படிங்க: பெண்ணின் சேலையை இழுத்து அவமதித்த அதிமுக பிரமுகர்; சென்னையில் அதிர்ச்சி.!