தமிழகம்

முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா! ஸ்தம்பிக்கும் மக்கள் கூட்டம்!

Summary:

dhevar jeyanthi vila

முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் மற்றும் இறந்தநாளான (அக்.30) ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிகாலையில் இருந்து நடைபெற்று வருகிறது. நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு பொதுமக்கள் பால்குடம் எடுத்துவந்து வணங்குவது வழக்கம். இதனால் இன்று தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

இன்று அதிகாலையில் இருந்து சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள தேவர்சிலைக்கு, பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதையை செய்து வருகின்றனர். இதனால் சென்னை தேனாம்பேட்டை சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   


Advertisement