காதலியுடன் சண்டையிட்டு, காவல் நிலைய அதிகாரிகளை பதறவைத்த உதவி ஆய்வாளர்: வாணியம்பாடியில் பகீர்.!

காதலியுடன் சண்டையிட்டு, காவல் நிலைய அதிகாரிகளை பதறவைத்த உதவி ஆய்வாளர்: வாணியம்பாடியில் பகீர்.!


Dharmapuri Native Cop Suicide Attempt in Vaniyambadi Police Station 

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). கடந்த 2021ல் காவல் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்து, கடந்த 7 மாதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். 

ராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்ட காவல் நிலயத்தில் பணியாற்றி வரும் இளம் பெண் காவல் ஆய்வாளரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த காதலுக்கு ராஜ்குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று இரவில் ராஜ்குமார் பணியில் இருந்துள்ளார். 

காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் பிற அதிகாரிகள் வழக்கு சம்பந்தமாக மும்மரமாக வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அச்சமயம் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமாருக்கு, காதலி தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, இவர்களுக்குள் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் ஆவேசமான ராஜ்குமார், செல்போனில் பேசியவாறு காவல் நிலையத்தில் நுழைந்து, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

காதலன் ஆவேசமாக சென்றதால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெண் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ந்துபோன அதிகாரிகள் காவல் உதவி ஆய்வாளரை வெளியே வர கூறியுள்ளனர். ஆனால், அவரோ தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

நீளமான துண்டை எடுத்து மின்விசிறியில் கட்டி கழுத்தில் மாட்ட, காவலர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு அமைதிப்படுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்,  நேரில் வந்து விசாரணை நடத்தினார். தற்கொலை கூடாது என அதிகாரிகள் அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.