மது ஊற்றி கணவனை நண்பர்களை வைத்து கொலை செய்த படுபாவி மனைவி : சுடுகாட்டில் உயிரோடு எரித்துக்கொலை..!



Dharmapuri man killed by gang

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நரசிபுரம் சுடுகாட்டில் கடந்த சனிக்கிழமையன்று 30 வயதுடைய ஆணின் சடலம் எரிந்த நிலையில் காவல்துறையினால் மீட்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சோம்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பது உறுதியானது.

இவர் டெம்போ வாகன ஓட்டுனராக பணியாற்றுகிறார். இவரின் மனைவி அம்சவல்லி. தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த விசாரணையில் அதிரடி திருப்பமாக அவரை குடும்ப உறுப்பினரே கொலை செய்ததும் அம்பலமானது. 

அதாவது மணியின் மனைவியான அம்சவல்லிக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்து வந்த நிலையில், கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட விஷயம் பாப்பாரப்பட்டி காவல்நிலையம் வரை சென்றுள்ளது. 

அங்கு இருவரும் சமாதானமாக வாழுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் தகராறு தொடர்ந்து வந்த நிலையில், தனது கல்லூரி காதலருடன் இடையில் ஏற்பட்ட காதலுக்கு மணி இடைஞ்சலாக இருந்துள்ளார். 

இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட அம்சவல்லி, காதலன் மற்றும் கணவரின் நண்பரான சந்தோஷ், அவரின் நண்பர் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து மணியை கொலை செய்துள்ளனர். 

மதுபானம் ஊற்றிக் கொடுத்த அம்சவல்லி சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைக்க, அவரை தனது நண்பர் லோகேஷூடன் சேர்ந்து சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கைகால்களை கட்டி வைத்து, உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு பெங்களூருக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் பெங்களூரு சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு பதுங்கியிருந்த சந்தோஷ் மற்றும் லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.