மாணவச்செல்வங்களே.. இன்று இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு..!!Dharmapuri district palakodu leave for school and college

தமிழகத்தில் வெகுவிமர்சையாக நடைபெறும் கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். ஏனெனில், அந்த திருவிழா மாவட்ட மக்களால் பிரதானமாக கொண்டாடப்படும் பட்சத்தில், பக்தர்களின் வசதிக்காக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழாவை முன்னிட்டு மார்ச் மாதம் எட்டாம் தேதியான இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Dharmapuri district

தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுகின்றன. அதேபோல அரசு தேர்வுகள் தொடர்பான பணிகள் வழக்கம் போல நடைபெறும் என்றும், அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.