14 வயது சிறுமி 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் : ஸ்பாவில் நடந்த படுபயங்கரம்.. இந்தியாவே அதிர்ச்சி.!

14 வயது சிறுமி 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் : ஸ்பாவில் நடந்த படுபயங்கரம்.. இந்தியாவே அதிர்ச்சி.!


delhi-gurugram-14-aged-minor-girl-raped-at-spa-forced-p

ஸ்பாவில் சிறுமியை வேலைக்கு அழைத்து சென்று, காதல் பெயரில் பலாத்காரம் செய்த கும்பல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பயங்கரம் நடந்துள்ளது. நாளொன்றுக்கு 15 வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் 5 நாட்களாக சிறுமி அனுபவித்த கண்ணீர் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கிராம் காவல் நிலையத்தில், கடந்த புதன்கிழமை இரவில் 14 வயதுடைய சிறுமி புகார் அளித்தார். இந்த புகாரில், "நான் செக்டர் 49 பகுதியில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இதனால் குடும்ப வறுமையை போக்க வேலை தேடி வருகிறேன். 

அப்போது பூஜா என்ற பெண்மணி என்னை சந்தித்தார். அவரின் மூலமாக எனக்கு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்த 2 நாட்களுக்கு உள்ளாகவே என்னை பணியில் இருந்து எடுத்த பணியாளர்கள், பூஜாவின் உதவியுடன் ஸ்பாவுக்கு வேலைக்கு அனுப்பினார்கள். 

delhi

பணிக்கு சேர்ந்த முதல் நாளே என்னை வாடிக்கையாளருடன் படுக்கையை பகிர நிர்பந்தித்தனர். நான் முடியாது என்று கூறியும் கேட்காமல் கட்டாபயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடந்தது. இதனை விடியோவாக பதிவு செய்த பூஜா, தினமும் அந்த விடியோவை காண்பித்து மிரட்டி பலருடன் என்னை படுக்கையை பகிர வைத்தார். 

நானும் என்ன செய்வதன்று தெரியாமல் அவர்களின் மகுடிக்கு ஆடும் பாம்பு போல செயல்பட்டேன். இவ்வாறாக ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நாளொன்றுக்கு 15 பேர் வரை பாலியல் பலாத்காரம் செய்தனர். எனது வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். ஸ்பாவுக்கு வரும் ஆண்களிடமும் அந்த விடியோவை கொடுக்கும் ஸ்பா உரிமையாளர், என்னை பலாத்காரம் செய்ய இளைஞர்களை தூண்டிவிடுகிறார். 

delhi

அந்த ஸ்பாவில் பணியாற்றி வந்த வாலிபன் என்னை காதலிப்பதாக நடித்து கற்பழித்தார். அதன்பின்னரே அனைத்தும் நடந்தது" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் பூஜா, ஸ்பா உரிமையாளர் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.