அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இராணுவ பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்க முடிவு: விழுப்புரம் மேலாண் இயக்குநர் அறிவிப்பு.!
தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரதானமாக அரசு போக்குவரத்து சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளை வைத்து மக்கள் தற்போது அதிகாலை பயணங்களை தொடங்கியுள்ள நிலையில், மக்களின் தேவைக்கு அது போதாது என்பதால் அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ராணுவ பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவைப்படும் பட்சத்தில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து பேருந்துகளையும் இயக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மேலாண் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.