உன்னோட நல்லதுக்கு தான்மா சொல்லுறோம்.! பெற்றோர் கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!

உன்னோட நல்லதுக்கு தான்மா சொல்லுறோம்.! பெற்றோர் கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!



daughter-suicide-for-parents-advice

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால் பல மாணவர்கள் செல்போனில் கேமிங் செயலிகளுக்கும், நண்பர்களுடன் சாட்டிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வகுப்பறையிலேயே செல்போனை மறைத்துவைத்து பயன்படுத்தும் அளவிற்கு மாணவர்கள் மாறிவிட்டனர். இந்தநிலையில், 11 ஆம் வகுப்பு மாணவி வாட்ஸ்-அப்பில் நண்பர்களுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் இவருக்கு தனலட்சுமி என்பவருடன் திருமணமாகி 21 வயதில் சஞ்சய் என்ற மகனும், 17 வயதில் நிவேதா என்ற மகளும் உள்ளனர். நிவேதா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் நிவேதா தனது பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிவேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.