தமிழகம்

செல்போனில் கேம் விளையாடிய மகள்! தாய் சொன்ன ஒற்றை வார்த்தை! மகள் எடுத்த விபரீத முடிவு!

Summary:

daughter suicide for mom advice

சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்தவர் பத்மா என்பவரின் கணவர் ரவிக்குமார் இறந்துவிட்டார். இதனையடுத்து பத்மா, தனது மகன் மற்றும் மகளுடன்  வசித்து வந்தார்.
பத்மாவின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று மாலை பாத்திமாவின் மகள், தனது சகோதரனுடன் சேர்ந்து செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த பத்மா, “படிக்காமல் இப்படி செல்போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறாயே” என மகளை கண்டித்துள்ளார்.

 இதனால் மனம் உடைந்த பத்மாவின் மகள் பத்மாவிடம் கோபித்துக்கொண்டு மாடியில் உள்ள தனி அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பத்மா மற்றும் அவரது மகன் அறை கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பத்மாவின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போதய வாழ்க்கைமுறையில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தாய், தந்தை கஷ்டப்பட்டு தங்களை வருத்திக்கொண்டு குழந்தைகளுக்காகவே வாழ்கின்றனர். ஆனால் இதுபோன்ற குழந்தைகளின் அவசர முடிவால் மேலும் பெற்றோர்கள் வாடி வைதைப்படுகின்றனர்.
 


Advertisement