87 வயது கண் தெரியாத மாமியார்! ஒத்த ஆளாக மருமகள் செய்த காரியம்! நெகிழ்ச்சி சம்பவம்!

87 வயது கண் தெரியாத மாமியார்! ஒத்த ஆளாக மருமகள் செய்த காரியம்! நெகிழ்ச்சி சம்பவம்!


Daughter in law helped mother in law to vote

கண் தெரியாத மாமியார் ஒருவரை மருமகள் ஒத்த ஆளாக தூக்கி வந்து ஒட்டு போட வைத்த சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றது.

இதில், சென்னீர்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த 87 வயது பாப்பம்மாவுக்கு ஒட்டு போடவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. கண் தெரியாத, நடக்க முடியாத நிலையில் இருந்த பாப்பம்மா தனது ஆசையை தனது மருமகள் பாண்டியம்மாவிடம் கூறியுள்ளார்.

Election 2019

வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் வாக்குச்சாவடிக்கு தனது மாமியாரை அழைத்துசென்றுளார் பாண்டியம்மாள். அதன்பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்துச்செல்ல வீல் சேர் எதுவும் இல்லாததால் தனது மாமியாரை கைகளால் தூக்கி கொண்டுபோய் ஓட்டுப்போட வைத்துள்ளார். பாண்டியம்மாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.