தமிழகம்

மகனின் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை.! மகன் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தையை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். தங்கராஜ் கடந்த 15 ஆண்டுகளாக 2 வது மனைவி சண்முகசுந்தரியுடன் வசித்து வருகிறார். தங்கராஜின் மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் புலவனூரில் வசித்து வருகிறார். தங்கராஜின் இரண்டாவது மனைவி சண்முக சுந்தரி திருக்குமருடனுன் ஒரே பள்ளியில் படித்துள்ளார். சண்முக சுந்தரியிடம் ஆசை வார்த்தை கூறி தங்கராஜ் அவரை திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

பள்ளியில் படித்த தனது தோழி தனது சித்தியானதால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் திருக்குமரன். இந்த நிலையில் , தங்கராஜ், தன் பெயரிலிருந்த நிலத்தில் அதிகப்படியான நிலத்தை இரண்டாவது மனைவி சண்முக சுந்தரிக்கு எழுதி வைத்துள்ளார். இதன் காரணமாக, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தங்கராஜூக்கும் அங்கு வந்த திருக்குமரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருக்குமரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தை தங்கராஜை வெட்டியுள்ளார். இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து திருக்குமரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Advertisement