தமிழகம்

என்னங்க இது..! கறிவேப்பிலைக்கு ஏற்பட்ட திடீர் மவுசு.. கடும் விலை ஏற்றத்தால் காசு கொடுத்து வாங்கும் மக்கள்..

Summary:

கருவேப்பிலையின் திடீர் விலையேற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருவேப்பிலையின் திடீர் விலையேற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக காய்கறி கடைகளில் இலவசமாக தரப்படும் கறிவேப்பிலையின் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் எந்த ஒரு காய்கறி கடைகளில் பொருள் வாங்கினாலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி கொசுறாக கொடுக்கும் வழக்கம். ஆனால் தற்போது கறிவேப்பிலையின் கடும் விலை ஏற்றதால் இனி கடைக்காரர்கள் கறிவேப்பிலை கொசுறு கிடையாது என்றே அறிவித்து விட்டார்களாம்.

குறிப்பாக மதுரை, வேலூர் போன்ற பகுதிகளில் இன்றைய நிலவரப்படி கறிவேப்பிலை கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகிவருகிறது. இதனால் கொசுறு கறிவேப்பிலையாக இருந்தாலும், காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


Advertisement