1 வயது பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெருநாய்? - திட்டக்குடியில் அதிர்ச்சி.. தாய் கண்ணீர்.!Cuddalore Tittakudi Dog Killed Baby 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் (37). இவரின் மனைவி நந்தினி (28). தம்பதிகளுக்கு வினித் (6) என்ற மகனும், தர்ஷன்குமார் என்ற 1 மாதமான கைகுழந்தையும் இருக்கின்றனர். மாலத்தீவில் தங்கியிருந்தவாறு சக்திவேல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். 

நந்தினி மற்றும் குழந்தைகள் கொடிக்குளம் கிராத்தில் இருக்கின்றனர். 6 வயதுடைய சிறுவன் வினித், அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை நேரத்தில் கைக்குழந்தையை நந்தினி வீட்டின் முன்பகுதியில் உறங்க வைத்துள்ளார். பின், வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 

இதையும் படிங்க: சைக்கிளில் சென்ற சிறுவனை பாய்ந்து கடித்துகுதறிய நாய்கள்; சென்னையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!

நாய் கடித்து காயமடைந்த குழந்தை பலி

இதனிடையே, திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்க, நந்தினி ஓடிவந்து பார்க்கையில் தெருநாய் ஒன்று நின்றுகொண்டு இருந்தது. மேலும், குழந்தையின் கழுத்திலும் காயம் ஏற்பட்டு, பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதனால் பதறிப்போன நந்தினி அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை பெண்ணாடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால், மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஆவினங்குடி காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: #JustIN: 12 வயது சிறுவனை கடித்துக்குதறிய நாய்; சென்னையில் மீண்டும் பயங்கரம்.!