தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
4 மாத குழந்தை சாலை விபத்தில் மரணம்; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சோகம்..!
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில், 4 மாத குழந்தை பரிதாபமாக பலியானது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவரின் மனைவி கற்பகவள்ளி. அஜித் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், கற்பகவள்ளி தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.
அஜித் குமார் - கற்பகவள்ளி தம்பதிகளுக்கு அஸ்விகா என்ற 4 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நேற்று குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தையை உறவினர்கள் 3 பேர் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிற 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.