காதல் திருமணம் செய்து வரதட்சணை கொடுமை.. இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..! கதறும் பெண்வீட்டார்..!!

காதல் திருமணம் செய்து வரதட்சணை கொடுமை.. இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..! கதறும் பெண்வீட்டார்..!!


cuddalore pennadam girl suicide

காதல் கணவன், மாமியார் செய்த வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர் விஜய். இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஜவுளி ஆலையில் பணியாற்றி வந்த போது, தன்னுடன் பணியாற்றிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் திருமணம்செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இருவருக்கும் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், நேற்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளவே, தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெண்ணின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

Cuddalore District

இந்த விஷயம் தொடர்பாக இளம்பெண்ணின் தாயார் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகளுக்கு விஜயும், அவரது தாயாரும் வரதட்சணை கொடுமை செய்ததால், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தனது சமுதாயம் குறித்து இழிவாக பேசிதிட்டியதால் மகள் மனமுடைந்து இவ்வாறான முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் கணவர் விஜய், மாமியார் வாலாம்பாள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.