தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சொத்தை பல் வலி குறைக்க அலுமினியம் பாஸ்பேட் வைத்த பெண் மயங்கி விழுந்து மரணம்.. அலட்சியம் வேண்டாம் மக்களே.!
பல்வலியை குறைக்க சுயமாக சிந்தித்து செயல்பட்ட பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, பி.என் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரின் மனைவி தனலட்சுமி. கடந்த சில நாட்களாகவேவே தனலட்சுமி பல் வலியினால் அவதிப்பட்டு வைத்துள்ளார்.
இதற்காக மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறாமல், பல் வலியும் தாங்க இயலாமல் அலுமினியம் பாஸ்பேட் மருந்தினை எடுத்து சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்துள்ளார்.
இதன்பின், தனலட்சுமி சிறிது நேரத்திற்குள்ளாகவே மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தனலட்சுமியை சிகிச்சைக்காக பண்ரூட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.