அக்காவுக்காக ஆசையாக கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த தம்பி; எமனாய் மாறிய பயங்கரம்..!

அக்காவுக்காக ஆசையாக கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த தம்பி; எமனாய் மாறிய பயங்கரம்..!


Cuddalore Chidambaram Women Died 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் நகைக்கடை உரிமையாளர். மகேஷின் மனைவி சுபாங்கி. சுபாங்கியின் சகோதரர் நாமதேவ். அக்காவுக்காக நாமதேவ் கார் ஓட்ட பயிற்சி அளித்து இருக்கிறார். 

அப்போது, ஆற்றுப்பாலத்தை கடக்க வலப்புறம் திரும்புவதற்கு பதில், இடப்புறமாக திரும்பியதாக தெரியவருகிறது. இதனால் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்துவிடவே, முன்பக்க கண்ணாடியை உடைத்து நாமதேவ் வெளியே வந்து உதவிக்காக போராடியுள்ளார். 

விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுபாங்கியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பலனில்லை. அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.