மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
20 தீட்சகர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட விசிக நிர்வாகி; சிதம்பரத்தில் பகீர்.. போராட்டம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில், ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் நேற்று தீட்சகர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு எதற்ச்சையாக சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இளையராஜா, தீட்சகர்கள் விளையாடுவதை வீடியோ எடுத்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கில் செத்துக்கிடந்த பல்லி.. கட்டிங் அடித்து உயிர் பயத்தில் அலறிய நபர்.. திட்டக்குடியில் சம்பவம்.!
மருத்துவமனையில் அனுமதி
இதனைக்கண்ட அவர்கள், செல்போனை பிடுங்கி சுமார் 20 பேராக சேர்த்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கிய விசிக நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
Breaking
— U2 Brutus (@U2Brutus_off) October 8, 2024
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்றைய தினம் இரவு வல்லம்படுகை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி நடராஜர் ஆலயத்திற்கு சென்று உள்ளார் அப்பொழுது ஆயிரம் கால் மண்டபத்து அருகில் தீட்சர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அதை வீடியோ எடுத்துள்ளார் இதை பார்த்த… pic.twitter.com/4JYzrdQDJg
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சிதம்பரம் காவல் நிலையம் முன்பு விசிகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கும் நபர்களின் செல்போன்கள் பல உடைக்கப்பட்டதாகவும், பிடுங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்து இருக்கின்றன. இதனிடையே, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!