புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
75 வது சுதந்திரதினம்: 75 பைசாவுக்கு பிரியாணி!.. அசத்தல் விளம்பரத்தால் முண்டியடித்த மக்கள் கூட்டம்..!
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிசுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆச்சரியமளிக்கும் வகையில், தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது, இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 75 பேருக்கு வெறும் 75 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று சலுகை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த சிறப்பு சலுகையை முன்னிட்டு உற்சாகமடைந்த பொதுமக்கள் இன்று காலை முதலே அந்த உணவகத்தின் வாசலில் முண்டியடித்தனர். அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி பார்சல்களை வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.