தமிழகம்

மணலை தோண்டிய வேலையாட்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன புதைக்கப்பட்டிருந்தது தெரியுமா?

Summary:

Crime near thintukal bus stand

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடை ஒன்றில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடந்துவந்துள்ளது. இதனால் கடையின் அருகில் செங்கல், மணல், கம்பி போன்ற பொருட்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தங்கள் பணியை தொடர்வதற்காக பணியாட்கள் வந்துள்னனர்.

அவர்கள் கட்டுமானத்திற்காக மணலை அள்ளும் போதுதான் அந்த பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆன அழகான பெண் குழந்தை ஓன்று உயிருடன் அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாட்கள் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த கொடூர செயலை செய்தது யார் என்பது குறித்து அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களில் சோதனை செய்துவருகின்றனர். மேலும், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அவசர அவசரமாக குழந்தை புதைக்கவே மணலில் புதைத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

பிறந்த சில மணி நேரங்களே ஆன நிலையில் குழந்தை ஓன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement