அச்சோ.. இதுவும் போச்சா.! டிடிஎஃப் வாசனுக்கு விழும் அடுத்த பேரிடி.! நீதிமன்றம் அதிரடி!!

அச்சோ.. இதுவும் போச்சா.! டிடிஎஃப் வாசனுக்கு விழும் அடுத்த பேரிடி.! நீதிமன்றம் அதிரடி!!



courtsend notice to pan the ttf vasan youtube channel

விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் தொலைதூரம் பயணம் செய்வது, மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோக்களை யூடியூப், பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு அவர் சாலையில் வேகமாக சென்று விபத்தில் சிக்கினார். 

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் செய்யும் சாகசங்களை அறிந்த நீதிபதி இவரது பைக்கை எரித்து விட வேண்டும், இவரது யூடியூப் சேனலை முடக்கிவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் டிடிஎஃப் வாசனின் பைக் லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. 40 நாட்கள் சிறையில் இருந்த அவர் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.

TTF Vasan

 அப்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதில் சிறைக்கு போனதும் தனக்கு திருமண ஆசை வந்து விட்டதாகவும், மூன்று மாதம் லிவிங் டு கெதரில் இருந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் வாசனின் யூடியூப் சேனலை 40 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில் அவர் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில் காவல்துறை சார்பில் இருக்கிறித்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் முதன்மை அமர்வு குற்றவியல் நீதிமன்றம் யூடியூப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையில் டிடிஎப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் இது தொடர்பான வழக்கு வரும் 29ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.