அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குடிமகன்களுக்கு அதிர்ச்சியான செய்தி! டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் மஹாத்மா காந்தி. அவரது பிறந்தநாளான அக்டோபர் 2 ஐ காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். அதேபோல ஜனவரி 30 ஆம் நாள் காந்தி இறந்த நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2 1869 ஆம் ஆண்டு பிறந்த நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் ஜனவரி 30 1948 ஆம் ஆண்டு கோட்ஸேவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவை நினைவு கூறும் விதமாக நாளை மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை நாளை ஒருநாள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.