தமிழகம்

விடிய விடிய தீபாவளி கொடாடிவிட்டு ரூம்குள் சென்ற தம்பதி.. காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

விடிய விடிய தீபாவளி கொண்டாடிவிட்டு கணவன் மனைவி இருவரும் விடியற்காலை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடிய விடிய தீபாவளி கொண்டாடிவிட்டு கணவன் மனைவி இருவரும் விடியற்காலை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (70). இவரது மனைவி சுமதி (64). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த மோகன்தாஸ் பணி ஓய்வு பெற்றநிலையில் தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளி அன்று இரவு கணவன் மனைவி இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிவிட்டு இரவு உறங்குவதற்காக தங்கள் அறைக்குள் சென்றுள்ளனர். இதனை அடுத்து அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் இருவரும் தங்கள் ரூமில் இருந்து வெளியேவரவில்லை.

ரூம் கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களது மகன் ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். மோகன்தாஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி சடலமாகவும் விழுந்து கிடப்பதை கண்டு அவர்களது மகன் அலறியுள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுமதி நீண்ட நாட்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்ததது தெரியவந்துள்ளது.

மேலும் இறப்பதற்கு முன் மோகன்தாஸ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றுள்ளனர். அந்த கடிதத்தில், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தங்களது மகன், மருமகள், பேரக்குழந்தைகளை விட்டுவிட்டு செல்வது கஷ்டமாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement