தமிழகம்

தமிழகத்திற்கும் வந்துவிட்டது கொரோனா வைரஸ்! இந்திய அளவில் 34 ஆக உயர்வு

Summary:

Corono virus in tamilnadu

சீனாவில் துவங்கி இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திற்கும் வந்துவிட்டது. இந்தியாவில் மட்டும் 34 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நேற்று வரை இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதில் ஓமனில் இருந்து தமழகத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்ப்பட்டு வருகிறது.

மேலும் ஈரானில் இருந்து லடாக்கிற்கு திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அமிர்தசரில் உள்ள குருநானக் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement