இத எல்லாம் கொரோனா பார்த்தா திரும்ப சீனாக்கே ஓடிரும்..! நம்ம ஊர்மக்களின் விழிப்புணர்வுக்கு ஒரே அளவே இல்லையா..? வைரல் வீடியோ.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பெரும் இழப்புகளை உலக நாடுகள் சந்தித்துவருகிறது.
இந்தியாவிலும் அதே நேரம் தமிக்காலத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா காரணமாக வரும் மே 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் பொது இடங்களில் நடமாட தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் கொரோனா விழிப்புணர்வு மற்றும், தனி மனித இடைவெளிகளை கடைபிடிக்க கூறி அரசு வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனம் முழுவதும் மஞ்சள் பூசி, வேப்பிலைகளை கட்டி தொங்கவிட்டவாறு வாகனத்தை ஓட்டிவரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.