தமிழகத்திற்கும் வந்துவிட்டது கொரோனா வைரஸ்..? தீவிர கண்காணிப்பில் திருவண்ணாமலை மென்பொறியாளர்..!
தமிழகத்திற்கும் வந்துவிட்டது கொரோனா வைரஸ்..? தீவிர கண்காணிப்பில் திருவண்ணாமலை மென்பொறியாளர்..!

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை இதுவரை 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயா்ந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் சீனவில் இருந்து இந்திய திரும்பிய கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து திரும்பிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை புண் நோயால் அவதிப்படுவந்துள்ளார். தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனி வார்டில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கான மற்றொரு பரிசோதனையின் முடிவு வந்தபிறகே அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.