தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி..! இன்று மட்டும் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா.? அதிர்ச்சி தகவல்..!

Summary:

Corono positive case update in tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும்நிலையில், இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இன்று மட்டும் 604 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 16 , 999 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் ஒரே நாளில் 18 பேர் உயிர் இழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. 


Advertisement