தமிழகம்

தமிழகத்தில் இரண்டாயிரத்தை கடந்தது கொரோனா இறப்பு..! நேற்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா - 66 பேர் பலி..!

Summary:

Corono positive case latest update

தமிழகத்தில் நேற்று புதிதாக 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,42,798 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 4,328 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றும் மட்டும் அதிகபட்சமாக 1,140 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement