தமிழகம்

கொரோனா கண்காணிப்பில் இருந்து தப்பிய ஓடிய இளைஞர்..! காதலி வீட்டில் வைத்து கைது செய்த போலீசார்..!

Summary:

Corono escaped from madhurai corono camp and arrested in lover home

மதுரையில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில், போலீசார் அவரை அவரது காதலியின் வீட்டில் வைத்து கைது செய்துள்ளன்னர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கொரோனா கண்காணிப்பு முகாம்களிலும், அவரவர் வீடுகளிலும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த  இளைஞர் ஒருவரை மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில், முகாமில் கண்காணிப்பில் இருந்த அவர் இன்று அதிகாலை அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து தப்பி ஓடிய இளைஞரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு சிவகங்ககையில் உள்ள அவரது காதலி வீட்டில் இருந்த இளைஞரை போலீசார் கைது செய்து மதுரை அழைத்துவருகின்றனர்.

தன்னை பார்க்க காதலி ஆசைப்பட்டதால் முகாமில் இருந்து தப்பித்து சென்றதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்நிலையில், அவரது காதலியை தற்போது கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement