தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம்! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்புகள்!

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம்! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்புகள்!



corono-affected-people-list-in-districtwise

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 331 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் 1075 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Coronovirus

இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் 199, கோவையில் 119, ஈரோட்டில் 64, திருப்பூரில் 60. திண்டுக்கலில் 56 திருநெல்வேலியில் 56, நாமக்கல்லில் 45 செங்கல்பட்டில் 43 திருச்சியில் 43, தேனியில் 41 இராணிப்பேட்டையில் 39, திருவள்ளூரில் 29, கரூரில் மற்றும் மதுரையில் தலா 25 பேர் , நாகையில் 24 தூத்துக்குடியில் 24,  விழுப்புரத்தில் 
23 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கடலூரில் 19 சேலத்தில் 17,  திருப்பத்தூரில் 16,  கன்னியாகுமரியில் 15 திருவாரூரில் 13 வேலூரில்12 தஞ்சையில் 11, திருவண்ணாமலை மற்றும் விருதுநகரில் தலா 11 பேர், நீலகிரியில் 9, காஞ்சிபுரத்தில் 8, சிவகங்கையில் 6, தென்காசியில் 5 கள்ளக்குறிச்சியில் 3,  ராமநாதபுரத்தில்  2,  அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.