தமிழகம் Covid-19

கண்கலங்கவைக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா.?

Summary:

Corona today chennai and Tamil Nadu update

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் இன்று வெளியான தகவலின் படி இன்று மட்டும் புதிதாக தமிழகத்தில் 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் மட்டும் 955 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் ஒரே ...

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,836 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக 5820 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement