தமிழகம் Covid-19

பல மாதங்களுக்கு முன் உயிரிழந்த தந்தைக்கு கொரோனா ரிசல்ட்.! டெஸ்ட் எடுக்காத மனைவிக்கு பாசிட்டிவ்..! கடும் வேதனையில் கணவன்.!

Summary:

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா, சுரண்டை பகுதியை சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா, சுரண்டை பகுதியை சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் என்பவரின் மகன் வினேத். இவர் தனது மனைவி ஜென்சியுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 19ம் தேதி தென்காசி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. 

அதில் அவரது தந்தை அந்தோணிராஜ்க்கு கொரோனா நெகட்டிவ் என்றும், மனைவி ஜென்சிக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்புகொண்ட ஊழியர், ஜென்சியை மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத், தன்னுடைய தந்தை அந்தோணிராஜ் 7 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதாகவும், தன்னுடைய மனைவி தென்காசியில் எந்த பரிசோதனையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். 

இதனை கேட்ட அடுத்தநிமிடமே அந்த ஊழியர், இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரிசோதனை செய்யாதவருக்கும், ஏற்கனவே இறந்தவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததாக வந்த தகவல் ஊழியர் ஒருவரின் கவனமின்மை காரணமாக நடந்ததா அல்லது இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதா என்பதை பொதுமக்களுக்கு அரசு தெளிவாக விளக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement