தமிழகம் Covid-19

தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மத்திய அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவவில்லை. தமிழகத்திலும் சமீப காலமாகவே கொரோனா பரவல் குறைத்துக்கொண்டு வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,40,849 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,379 ஆக அதிகரித்துள்ளது. 


Advertisement