தமிழகம் Covid-19

தமிழக தலைமைச் செயலாளரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Summary:

corona possitive tamilnadu chief secratry mom

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 6,972  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து சுகாதாரத்துறையினர், அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது.

 இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement