திருமணத்திற்கு போக வேண்டுமா?? வந்தது புதிய வழிமுறை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

திருமணத்திற்கு போக வேண்டுமா?? வந்தது புதிய வழிமுறை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!


Corona lock down new rules for e-register for marriages

ஊரடங்கு சமயத்தில் திருமணங்களுக்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில்  அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் முழு ஊரடங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் இ-பதிவு செய்வது அவசியம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்க்காக வெளி மாவட்டங்கள் செல்லவதற்கான இ-பதிவு முறையை தமிழக அரசு தற்காலிகமாக நீக்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது திருணத்திற்கான இ-பதிவு பல்வேறு புதிய வழிமுறைகளுடன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி

1 . திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும்.
2 . ஓட்டுநர் பெயர், கைபேசி எண், பயணிப்போரின் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
3 .  மணமகன், மணமகள், தாய் அல்லது தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ளவேண்டும் எனவும், இ-பதிவு செய்பவரின் பெயர் இ-பதிவில் கட்டாயம் இடம்பெற வேண்டுமெனவும் கூறியிருக்கிறது.
4 . மேலும் திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..