மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா.!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா.!


corona-increased-in-tamilnadu-L5V2RY

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், சமீப காலமாக கொரோனா பரவல்  குறைந்து வந்தது.

ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளுமாறு அணைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது.

corona

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.