தமிழகம் Covid-19

இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு! கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழப்பு!

Summary:

corona increased in tamilnadu

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்திலே சென்னையில் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து கொரோனா தோற்று அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் இன்று ஒருநாள் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement