தமிழகம் மருத்துவம் Covid-19

தமிழகத்தில் கடந்த 2நாட்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் 1,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் 1,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 60 வயது பெண்ணும், நேற்று முன்தினம் 56 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை முற்றிலுமாக கடைபிடிப்பதே கொரோனாவை ஒழிப்பதற்கு வழிவகுக்கும். எனவே தமிழக மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுவோம். 


Advertisement